உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பிரதான சந்தேகநபரென அறியப்பட்ட தற்கொலைதாரி சஹ்ரான் ஹாசீமினின் போதனைகள் மற்றும் பிரிவினைவாத சிந்தனைகளை பிரசாரம் செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இணையத்தளங்களின் ஊடாகவே இவ்விருவரும் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளனர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பயங்கரவாத தடைச்சடத்தின் கீழ், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.