வவுனியா – இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றினுள் வைத்து, முஸ்லிம் இளைஞன் ஒருவர், நேற்றிரவு (31) வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி – அக்குரனை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.

கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாட்டு வாரமாக தற்போது காணப்படும் நிலையில், நேற்று குறித்த தேவாலயத்தில், இரவு வழிபாடு இடம்பெற்ற நிலையில், சந்தேகத்துக்கிடமான முறையில் குறித்த இளைஞன் தேவாலயத்துக்குள் சென்றுள்ளார்.

இதன்போது, அவர் பிடிக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.