இலங்கையில் ஏற்றப்பட்டு வந்த கொவிசீல்ட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதென, தொற்று நோய் பிரிவின் பிரதானியும் தொற்றுநோய் பிரிவின் நிபுணருமான விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சேரம் நிறுவனமானது கொவிசீல்ட் தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதன் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 29ஆம் திகதியிலிருந்து இதுவரை 9,24,000 பேருக்கு இந்தியாவின் கொவிட்சீலட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் மாதம் இறுதிக்குள் கொவிசீல்ட் தடுப்பூசியை இந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.