அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் வெப்பமான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பருவமழைக்கு இடைப்பட்ட காலங்களில் இதுபோன்ற வெப்பமான வானிலை சாத்தியமாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

முல்லைதீவு, வவுனியா, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இன்றைய தினம் அதிக வெப்பநிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உட்பட உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.