சீனாவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கோவிட் தடுப்பூசிகள் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இவை முதலில் இந்நாட்டிலுள்ள சீன பிரஜைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட 6 லட்சம் தடுப்பூசிகள் கடந்த 31 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் இதனை இலங்கைக்கு வழங்கியிருந்தார்.