யாழ்ப்பாணம் வடமராட்சி கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை அருந்திய, வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் மேற்கு பகுதியை சேர்ந்த  கந்தையா சிறிக்குமார் (வயது 47) என்பவர் உயிரிழந்துள்ளார்.

கடலில் மிதந்து வந்த போத்தலை எடுத்து, திறந்து பார்த்துள்ளார். அதனுள் திரவம் இருந்துள்ளது. அதனை  அருந்தியுள்ளார்.

அருந்தி சில நிமிடங்களிலேயே அவர், மயக்கமடைந்துள்ளார். அவரை அவதானித்து கொண்டிருந்தவர்கள், அம்பன் வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மந்திகை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டும் போதே, அவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மந்திகை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்