இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை நாள்கள் ஒரு வாரமாக குறைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாடங்களை பூரணப்படுத்துவதற்கான தேவையை கருத்திற்கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை, ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதி வரையும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. இதனால், மாணவர்களுக்கு நீண்ட விடுமுறை வழங்க முடியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.