கொழும்பு, நீர்கொழும்பில் புதிய கொவிட் தொற்றாளர்கள் இன்று (19) இனங்காணப்பட்டனர்.

புதிய கொவிட் தொற்றாளர்கள் 63 பேர், இன்று (19) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் இனங்காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19  தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 41 பேரும், குருநாகலில் 50 பேரும் புத்தளத்தில் 30 பேரும், களுத்துறையில் 18 பேரும், இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணத்தில் தலா 15 பேரும் காலியில் 13 பேரும் கண்டியில் 11 பேரும் கொவிட் தொற்றாளர்களாக  இனங்காணப்பட்டுள்ளனர்.

மாத்தறை, கேகாலை, பதுளை, மாத்தளை, நுவரெலியா, அனுராதபுரம், மட்டக்களப்பு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, மொனராகலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில், 10க்கும் குறைவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் கொள்ளுப்பிட்டியவில், ஆகக் கூடுதலாக 10 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். முல்லேரியாவில் ஒன்பது பேரும், அவிசாவளையில் எண்மரும், கோட்டை மற்றும் வெலிக்கடையில் தலா அறுவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.