கிளிநொச்சி இரணை தீவில் மீள் குடியேறி  வாழ்ந்து வரும் மீனவக் குடும்பங்கள்  அடிப்படை வசதிகள் இன்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர் .

கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவுப் பகுதியில் மீள்குடியேறியுள்ள  மீனவக் குடும்பங்கள் தொழில் முதலீடுகளைச் செய்து தமது தொழில்களை கடந்த 22 வருடங்களுக்கு பின்னர், ஆரம்பித்துள்ளதாகவும் இப்  பகுதியில் மீள்குடியேறிய மீனவ குடும்பங்கள் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக குடிநீர் வசதி மற்றும் மருத்துவ வசதி மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்