Header image alt text

ஜேர்மன் நாட்டின் Ludwigsburg பகுதியில் வதியும் சுபாங்கி பவானந்த் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை (25.04.2021) முன்னிட்டு, பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கிளாலிப் பிரதேசத்தில் வதியும் இரு குடும்பங்களுக்கு, அவர்களது குடும்பப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ 45,000/- நிதியுதவியினை, புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளை மூலம் வழங்கி வைத்துள்ளார்.

கிளாலிப் பிரதேசத்தைச் சேர்ந்த சின்னப்பு நாகம்மா, மாணிக்கம் சிவராசா ஆகியோரின் குடும்பத்தினர் மேற்கொள்ளவுள்ள வெங்காயச் செய்கைக்காக இந் நிதி வழங்கப்படவுள்ளது. Read more

25.04.1985 இல் மரணித்த தோழர் நாதன் (தேவராஜ் ஜெயசிங்கம் – மன்னார்) அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததோடு மற்றவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். Read more

நடைபெற்று முடிந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்தஇதனை தெரிவித்தார். பெறுபேறுகளை வெளியிடுவதற்கான பணிகள் இறுதி கட்டத்தினை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். Read more

வருடாந்தம் புதுப்பிக்கப்படும் வாக்காளர் பெயர் பட்டியலில் 4 மாதங்களுக்கு ஒருமுறை இணைப்புக்களை சேர்ப்பதற்காக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அண்மையில் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள வாக்காளர் பெயர் பட்டியல் திருத்த சட்டமூலத்தின் ஊடாக இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். Read more

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார். அதிகளவானோரை இணைத்துக்கொண்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்த போதும், குறித்த பாடசாலையில் நேற்று மற்றும் இன்றைய தினங்களில் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டுள்ளது. Read more

விமான நிலையத்தில் விமானப்பயணிகளை வழியனுப்ப வருவோர்க்கும், விமானப்பயணிகளை வரவேற்று அழைத்துச் செல்ல வருவோருக்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், விருந்தினர்கள் எவரும் விமான நிலையத்துக்குள் நுழைய முடியாது. அப்பகுதி இழுத்து மூடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலான வெடிபொருட்கள் சில பொலிகண்டியில் இன்று (24) மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். பொலிகண்டி புதுவளவு என்ற இடத்திலேயே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. வெடிபொருட்களை செயலிழக்க வைப்பதற்கான தொழில்நுட்பத் திறன் தொடர்பில் கண்டறியப்படாத நிலையில் சிறப்பு அதிரடிப்படையின் உயர்மட்டப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் – அரியாலை – நாவலடி, குளம் ஒன்றில் குளிக்கச் சென்றவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பிரதேசத்தை சேர்ந்த பிரதீபன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.