கிளிநொச்சி – அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் 15க்கும் மேற்பட்ட குழு சென்று தாக்குதல் மேற்கொண்டு விட்டுத் தப்பிசென்றுள்ளது. இச்சம்பவம், நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த குழுவினர் அங்கிருந்த இரண்டு வளர்ப்பு பன்றிகள், வான்கோழி உள்ளிட்டவற்றை வாளினால் வெட்டி படுகொலை செய்துள்ளதுடன், வாழ்வாதார வளர்ப்புக்களின் இருப்பிடங்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதேவேளை குறிதத் வீட்டு உரிமையாளரின் மனைவியையும் தாக்கியதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரு நபர்களிடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிணக்கு விரிவடைந்து இவ்வாறு குழுத்தாக்குதலாக மாறியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவித்தும்ம், உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையென சம்பவத்தில் பாதிக்கப்ட்டோர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அக்கராயன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.