தோழர் மகாதேவா (வேலுப்பிள்ளை மகாதேவா) அவர்கள் கடந்த 27.04.2021 செவ்வாய்க்கிழமை கொழும்பில் காலமானதையிட்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயரில் மூழ்கியிருக்கின்றோம்.

இனப்பற்றும், தமிழ் மக்களின் அரசியலில் மிகுந்த அக்கறையும் மிக்க இவர், 80களிலேயே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயற்பட்டதோடு பின்னர், புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் புலம்பெயர் தேசத்திலும் தமிழ் மக்களுக்காக தன்னாலான பணிகளை ஆற்றி வந்தார்.

1984ஆம் ஆண்டு முதல் கழகத்தின் ஜெர்மன் கிளையில் தன்னை இணைத்துக் கொண்டு கழகப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட அவர், ஜெர்மன் கிளை நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புக்களையும் வகித்தார்.

2018ம் ஆண்டு தாயகம் திரும்பும் வரை அவர் ஜெர்மன் கிளையில் செயற்பட்டு வந்தார். மிக அன்பான, நேர்மையான தோழர் மகாதேவாவின் இழப்பு சாதாரணமானதல்ல.

அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர் நண்பர்களுடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந் துயரினைப் பகிர்ந்து கொண்டு எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
29.04.2021.