மேல் மாகாணத்தில் இருந்து வெளியேருவோர் மற்றும் உள்நுழைபவர்கள் தொடர்பில் விசேட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இன்று (29) பிற்பகல் 12 மணி முதல் பொலிஸார், சுகாதார சேவையினர் மற்றும் முப்படையினர் இணைந்து இந்த பரிசோதனை நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

12 இடங்களில் இவ்வாறு குறித்த கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கும் மேல் மாகாணத்திற்கு வருவோருக்கும் இந்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய,
1. கொச்சிக்கட தோப்புவ பாலம்
2. கொட்டதெனியாவ படல்கம பாலம்
3.நிட்டம்புவ ஹெலகல பாலம்
4.மீரிகம கிரிவுல்ல பாலம்
5. தொம்பே சமனபெத்த பாலம்
6. ஹங்வெல வனஹாகொட பாலம்
7. அளுத்கம பெந்தர பாலம்
8. தினியாவல சந்தி
9. இங்கிரிய கெடகெந்தல பாலம்
10. பதுரலிய-கலவான சமன் தேவாலயம்
11. மீகஙாதென்ன பொலிஸ் பிரிவின் கொரகதுவ அவித்தாவ பாலம்
12. தெற்கு அதிவேக வீதியின் வெலிபன்ன மாற்றிடத்துக்கு அருகில் இந்த பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன.