Header image alt text

சமீபத்திய வாரங்களில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, அதிகரித்துள்ளது. என்றாலும் முழு நாடும் முழுமையாக முடக்கப்படாமல் (லொக்டவுன்) இருப்பதற்கே அரசாங்கம் முடிவு செய்துள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முழுநாட்டையும் முடக்குதல் பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கேவை இன்று சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more

கிளிநொச்சி – அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் 15க்கும் மேற்பட்ட குழு சென்று தாக்குதல் மேற்கொண்டு விட்டுத் தப்பிசென்றுள்ளது. இச்சம்பவம், நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த குழுவினர் அங்கிருந்த இரண்டு வளர்ப்பு பன்றிகள், வான்கோழி உள்ளிட்டவற்றை வாளினால் வெட்டி படுகொலை செய்துள்ளதுடன், வாழ்வாதார வளர்ப்புக்களின் இருப்பிடங்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதேவேளை குறிதத் வீட்டு உரிமையாளரின் மனைவியையும் தாக்கியதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more

அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மத்திய முகாம் – 04 கிராம சேவையாளர் பிரிவில் வசித்து வந்த பொன்னைய்யா ரசிகரன் (வயது 29) எனும் குடும்பஸ்தர், இன்று (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தார். பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு வருகை தந்த பொலிஸார், குடும்ப உறவினர்களிடம் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன், சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு மேற்படி குடும்பஸ்தரை அழைத்து வந்த நபரொருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இம்மரணம், தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை மத்திய முகாம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். நாளாந்த கூலி வேலை மற்றும் மீன் வியாபார தொழிலில் ஈடுபட்டுவரும் உயிரிழந்துள்ள நபருக்கு, 6 வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது.

வைத்தியசாலையில் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் பல்வேறு நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட மூவர் உயிரிழந்துள்ளனரென, களுத்துறை- நாகொட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தமர களுபோவில தெரிவித்தார். இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தனர். பின்னர் முன்னெடுக்கப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த மூவரும்,பதுரலிலியைச் சேர்ந்த 76 வயது, பெல்பொலையைச் சேர்ந்த 70 வயது மற்றும் மத்துகமயைச் சேர்ந்த 83 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 463 பேர் இனங்காணப்பட்டுள்ளனனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனூடாக இலங்கையில் கொவிட்-19 தொற்று பரவ ஆரம்பித்தது முதல் இதுவரையில் ஒரு நாளில் பதிவாகிய உயர்வான தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்றைய தினம் (28) உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 1451 பேர் இன்றைய தினம் கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27.04.1991இல் வவுனியா தாண்டிக்குளத்தில் மரணித்த தோழர்கள் சேகர் (முருகேசு வடிவேல் – திருவையாறு), ரவி (கிளைமண்ட் எதிர்மன்னசிங்கம் – குருநகர்) ஆகியோரின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் இந்த மாதம் 30ஆம் திகதி வரை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் மேல் மற்றும் வடமேல் மாகாண பாடசாலைகளை மாத்திரம் தற்காலிகமாக மூடுவதற்கு கல்வி அமைச்சு அறிவித்திருந்த நிலையில் இன்று சகல பாடசாலைகளையும் மூட நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை சகல தனியார் வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 பரவல் ஆரம்பித்த நாள் முதல் நாட்டில் முதல் முறையாக நாளொன்றில் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இன்று பதிவாகியுள்ளனர். இன்று மாலை 574 பேருக்கு தொற்றுறுதியாகி இருந்த நிலையில் இன்றுமாலை மேலும் 422 பேருக்கு தொற்றுறுதியானது. இதற்கமைய இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1096 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது. இதையடுத்து நாட்டில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிககை 103,472 ஆக உயர்வடைந்துள்ளது.

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் Wei Fengheஇன்று நாட்டிற்கு வருகை தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2018 மார்ச் 19ம் திகதி சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக ஜெனரல் Wei Fenghe பதவியேற்றார் சீனாவின் மத்திய இராணுவக்குழுவின் உறுப்பினராகவும் அவர் தற்போது பதவி வகிக்கின்றார். எதிர்வரும் 29ம் திகதி வரை சீன பாதுகாப்பு அமைச்சர் நாட்டில் தங்கியிருப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
.

சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியாராச்சி ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். தனக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் அவர் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சுதேவ ஹெட்டியாராச்சி அடுத்த வாரம் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரான சுதேவ ஹெட்டியாராச்சி சிறந்த அனுபவமிக்க சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆவார். 25 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் பணியாற்றும் அவர்இ முன்னணி ஊடக நிறுவனங்களில் கடமையாற்றியுள்ளார்.