Posted by plotenewseditor on 1 May 2021
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 1 May 2021
Posted in செய்திகள்
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் பண்டிகை என்பவற்றை வீட்டிலேயே கொண்டாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன இதனை தெரிவித்தார். கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். Read more
Posted by plotenewseditor on 1 May 2021
Posted in செய்திகள்
நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் அறிவித்துள்ளார். நாட்டின் கொரோனா நிலைமையால் 3 ஆம் திகதி முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலைகளை திறப்பது பொருத்தமற்றது என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை கொரோனா தொற்றின் காரணமாக, நாட்டிலுள்ள சகல திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்கள் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 1 May 2021
Posted in செய்திகள்
நாட்டில் கொரோனா தொற்றின் வேகம், நினைத்துப் பார்க்க முடியாத வகையில் அதிகரித்து செல்லும் நிலையில், சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டல்கள் அங்கிய சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது. அதடினப்படையில்,
கொரோனா தொற்று அல்லாமல் மரணிப்போரின் இறுதிக்கிரியைகள் 24 மணிநேரத்துக்குள் செய்யவேண்டும்.
இறுதிக்கிரியைகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், மறு அறிவித்தல் வரையிலும் மூடப்படும். Read more
Posted by plotenewseditor on 1 May 2021
Posted in செய்திகள்
கொவிட்-19 தொற்று வியாபிப்பதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் இறுதி அறிக்கையின் பிரகாரம் கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 317ஆகும். அதில், கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 94 பேர் இனங்காணப்பட்டனர். ஏனைய 223 பேரும் கொழும்பு மாட்டத்துக்குள் இனங்காணப்பட்டனர். அதில், கெஸ்பேவையில் 51 பேருக்கும், கொம்பத்தெருவில் 15 பேருக்கும் வெள்ளவத்தையில் 15 பேரும் அடங்குகின்றனர். இன்றுக்காலை நிறைவடைந்த 24 மணிநேரத்துக்குள் கிடைக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே கொழும்பு மாவட்டத்துக்குள் 223 பேருக்கு கொரோனா தொற்றியயிருக்கிறது. Read more
Posted by plotenewseditor on 1 May 2021
Posted in செய்திகள்
மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்கள் கரடியனாறு மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஆண்கள் இருவர், நேற்று இரவு உயிரிழந்துள்ளனர் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளா வைத்தியர் நகலிங்கம் மயூரன் தெரிவித்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைபெற்று வந்த 57 வயதுடைய கரடியனாறு கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்தவர் நேற்றிரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 1 May 2021
Posted in செய்திகள்
மன்னார் மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 342 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவுக்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதாகர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 359 கொரேனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு முதல் 4 மாதங்களில் 342 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏப்ரல் மாதம் மாத்திரம் 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 1 May 2021
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, 101,658ஆக அதிகரித்துள்ளது. அதில், பிலவ வருட கொத்தணியில் 922 பேர் அடங்குகின்றனர். அத்துடன் இலங்கையில் மேலும் 1,304 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 109,450 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். Read more