நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் அறிவித்துள்ளார். நாட்டின் கொரோனா நிலைமையால் 3 ஆம் திகதி முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலைகளை திறப்பது பொருத்தமற்றது என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை கொரோனா தொற்றின் காரணமாக, நாட்டிலுள்ள சகல திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்கள் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.