Header image alt text

புளொட் அமைப்பின் சின்னத்துடன் People’s Liberation Organisation of Tamil Eelam – PLOTE எனும் பெயரில் இயங்கும் முகப்புத்தக பக்கம் புளொட் அமைப்பின் உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கம் அல்ல என்பதை அறியத் தருகிறோம்.
மேற்படி முகப்புத்தக பக்கத்தில் வெளிவரும் பதிவுகளுக்கும் புளொட் அமைப்புக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதையும் உத்தியோகபூர்வமாக அறியத் தருகிறோம்.
மேலும், புளொட் அமைப்பின் சின்னத்துடனும் பெயருடனும் வெளிவரும் மேற்படி பக்கத்தை நிறுத்துவதற்கான அனைத்து வழியிலான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.
எமது உரிமைப் போராட்டத்திற்கு உரிய அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு தி.மு.க ஆட்சி தொடர்ந்தும் ஆதரவினை வழங்க வேண்டும்- புளொட்டின் சர்வதேச ஊடகப் பேச்சாளர் செ.ஜெகநாதன் அவர்கள் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து-
மதிப்பிற்கு உரிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் மாண்புமிகு மு.க, ஸ்டாலின் அவர்களுக்கு,
உங்கள் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று நீங்கள் முதல்வராக பதவியேற்க இருப்பதனையிட்டு நாம் மகிழ்ச்சி அடைவதோடு எமது உளப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

Read more

இம்முறை வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் 64.39 சதவீதமான மாணவர்கள் பல்கலைகழகங்களிற்கு தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பரீட்சை மீள் பரீசிலனைக்காக விண்ணப்பங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் எனவும் கூறப்படுகின்றது. இம்முறை பரீட்சைக்காக 362,824 பரீட்ச்சார்த்திகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அதனடிப்படையில் அவர்களுள் 194,297 மாணவர்கள் பல்கலைகழகங்களிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டு பரீட்சைகளையும் நடத்தும் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் இவ்வாண்டு அமுல்படுத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். ஓகஸ்ட் மாதம் சாதாரண தர பரீட்சையையும், டிசம்பரில் உயர்தர பரீட்சையும் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இருப்பினும் இந்த மாற்றம் 2022 ஆண்டு அல்லது 2023 ஆம் ஆண்டே அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். Read more

இலங்கையில் மேலும் 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 114,826 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 99,153 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி 709 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடல்பரப்பில் அத்துமீறிய நுழைய முற்பட்ட 86 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் இந்திக டீ சில்வா தெரிவித்துள்ளார். கடல்வழியாக சட்டவிரோதமாக வருபவர்களால் நாட்டுக்குள் கொரோனா அச்சுறுத்தல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனைத் தடுப்பதற்காக 24 மணிநேரமும் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, மன்னார் தெற்கு கடல் பரப்பில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே நாட்டுக்குள் நுழைந்த 11 இந்திய மீன்பிடிப் படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். Read more