Header image alt text

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக பதவியேற்ற தோழர் தர்மலிங்கம் யோகராஜா(யோகன்) அவர்கள் பதவியேற்றதன் பின்னர் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவில்லத்தில் அஞ்சலியுடன் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் சு.ஜெகதீஸ்வரன்(சிவம்), வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் வே.குகதாசன்(குகன்), வவுனியா நகர சபை உறுப்பினர் சு.காண்டீபன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் நந்தகுமார் மற்றும் கட்சியின் மாவட்ட அலுவலகப் பொறுப்பாளர் தோழர் ஓசை உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) மத்திய குழு உறுப்பினரும், கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் யோகராஜா (யோகன்) அவர்கள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தவிசாளராக இதுவரையிலும் கடமையாற்றிய ரெலோ அமைப்பின் துரைசாமி நடராஜசிங்கம்(ரவி) அவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட், ரெலோ அமைப்புகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்டிருந்த தேர்தல் கால உடன்படிக்கைக்கமைவாக, தனது தவிசாளர் பதவியை அண்மையில் இராஜினாமா செய்திருந்தார்.

இதையடுத்து இன்று (05.05.2021) முற்பகல் 10.00 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் நிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற புதிய தவிசாளர் தெரிவிற்கான கூட்டத்தில் திரு. தர்மலிங்கம் யோகராஜா (யோகன்) அவர்கள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சபையில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 5 May 2021
Posted in செய்திகள் 

தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த தமிழ் உணர்வாளரும், தமிழ்மண் பதிப்பக உரிமையாளருமான கோ. இளவழகன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயரடைகின்றோம்.

தமிழ் மக்களின் விடுதலை மீதும், விடுதலைப் போராட்டத்தின் மீதும் மிகுந்த ஆர்வங்கொண்ட இளவழகன் அவர்கள், 1983களில் தமிழக அரசியல்வாதியும், மறைந்த தமிழக முன்னாள் வருவாய்த்துறை அமைச்சருமான எஸ்.டி. சோமசுந்தரம் அவர்களினூடாக கழகத்திற்கு அறிமுகமாகி 1987 வரை கழகத்திற்கு பல்வேறு வகையிலும் ஆதரவளித்து வந்தார். ஒரத்தநாட்டிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் கழகத்திற்கான பல பயிற்சி முகாம்களை அமைப்பதற்கான ஒழுங்குகளையும், பல்வேறு உதவிகளையும் நல்கியிருந்தார் என்பதை துயர்மிகு இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர்கின்றோம். Read more

05.05.1999இல் வவுனியாவில் மரணித்த பளை பிரதேச சபையின்  முன்னாள் உறுப்பினர் தோழர் குணம் (வீரகத்தி குணரத்தினம் – திருநாவற்குளம்) அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….