வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக பதவியேற்ற தோழர் தர்மலிங்கம் யோகராஜா(யோகன்) அவர்கள் பதவியேற்றதன் பின்னர் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவில்லத்தில் அஞ்சலியுடன் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் சு.ஜெகதீஸ்வரன்(சிவம்), வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் வே.குகதாசன்(குகன்), வவுனியா நகர சபை உறுப்பினர் சு.காண்டீபன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் நந்தகுமார் மற்றும் கட்சியின் மாவட்ட அலுவலகப் பொறுப்பாளர் தோழர் ஓசை உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.