கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், பணியாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை அடுத்து, பாராளுமன்ற கட்டடத்தொகுதியில், சபாநாயகரின் காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அத்துடன் அந்த காரியாலயத்தில் பணியாற்றிய பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சபாநாயகர் அந்தக் காரியாலயத்துக்கு வருகைதருவதை தவிர்த்துள்ளார்.