தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) உபதலைவர்களுள் ஒருவரும், கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான (தோழர் பக்தன்) மகாதேவன் சிவநேசன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் இன்று (10.05.2021) திங்கட்கிழமை முற்பகல் 10மணியளவில் அன்னாரது காரைதீவு இல்லத்தில் நடைபெற்றது.

இறுதி நிகழ்வில் தோழர் பவன் (கட்சியின் பொருளாளர்), தோழர் கேசவன் (உபதலைவர்), தோழர் சூட்டி(மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்), தோழர் கொன்சால் (மன்னார் மாவட்ட அமைப்பாளர்), தோழர் பீற்றர் (திருமலை), தோழர் சிவம் (வெண்கலச்செட்டிகுளம் பிரதேசசபை தவிசாளர்), கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் ராகவன், கமலநாதன், கிருபாமாஸ்டர் மற்றும் செந்தில், யூலி, முகுந்தன், தவராஜா, சங்கரி, ரோசி, கங்கா, ரமேஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இறுதிக் கிரியைகளைத் தொடர்ந்து அன்னாரது பூதவுடல் காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு முற்பகல் 11மணியளவில் தகனக் கிரியைகள் இடம்பெற்றன. Read more