Header image alt text

12.05.1998இல் வவுனியா கோவில்குளத்தில் மரணித்த தோழர்கள் தாஸ் (செல்லத்துரை சாந்தகுமார்), விந்தன் (தம்பிராஜா துரைராஜா), சாந்தன் (சின்னத்தம்பி சிவநேசன்), ஜூலி (செல்லத்தம்பி பத்மசீலன்), லோரன்ஸ் ஆகியோரின் 23ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும், புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உபதலைவர்களுள் ஒருவரும்,, அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான அமரர்.மகாதேவன் சிவநேசன் (தோழர் பக்தன்) அவர்களுக்கு எமது வீர அஞ்சலியை செலுத்தி நிற்கின்றோம்.

தோழர் பக்தன் அவர்களுக்கான அஞ்சலிக்கூட்டம் “இணைய (சூம்) வழி” மூலமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16/05/2021) நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Meeting ID: 860 8760 1116
Passcode: PLOTE2021

காலம் & நேரம்.. – ஞாயிற்றுக்கிழமை -16/05/2021 –
இலங்கை நேரம் மாலை 05.00 PM // லண்டன் நேரம் மதியம் 12.30 PM // ஐரோப்பா நேரம் பிற்பகல் 01.30 PM // கனடா நேரம் காலை 07.30 AM

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

அடையாள அட்டை எண்ணின் அடிப்படையில் வீட்டிலிருந்து வெளியேறும் முறை-
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படாத சந்தர்ப்பங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியேறும் நபர்களுக்கு தேசிய அடையாள அட்டையின் இலக்கங்களை அடிப்படையாக கொண்டு அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டில் நாளை (13) முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ள பயணக் கட்டுப்பாடு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதி பத்திரத்தை பயன்படுத்த முடியும். இதன் காரணமாக தொழிலுக்காக அல்லது வேறு அத்தியாவசிய தேவைக்காக வீட்டில் இருந்து வெளியேறும் போது அனைத்து பொதுமக்களும் அடையாள அட்டையை எடுத்துச் செல்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ´உதாரணமாக இன்று மே மாதம் 12 ஆம் திகதி. இன்றைய தினத்தில் அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள் 2,4,6 அல்லது 8 ஆக இருக்கும் நபர்களுக்கு மாத்திரமே வீட்டில் இருந்து வெளியேற முடியும். நாளை 13 ஆம் திகதி அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள் 1,3,5,7 அல்லது 9 ஆக இருக்கும் நபர்களுக்கு மாத்திரம் பயணிக்க முடியும். 0 இருக்கும் போது அது இரட்டை எண்ணாக கருதப்படும். அதன்படி, இரட்டை எண்ணுக்கு உரிய தினத்தில் பயணிக்க முடியும்´ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க இங்கே அழுத்தவும்…. Read more