இந்த அரசின் செயற்பாடுகள் எதிர்பார்த்ததுதான். எனினும், இவ்வளவு தூரம் இனஒடுக்குமுறையை மேற்கொள்வது கண்டிக்கத்தக்க விடயம். உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியை இடிப்பதன் மூலம், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இனஒடுக்குமுறையின் பரிமாணத்தை உலகிற்கு அவர்களாக வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிலொன்றான புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வது மாத்திரமல்ல, உயிரிழந்தவர்களின் நினைவாக தூபியை வைத்திருக்கவும் அனுமதிக்க மாட்டோம் என இந்த அரசாங்கம் தெளிவாக நிரூபித்துள்ளது.

இந்த அரசின் செயற்பாடுகள் எதிர்பார்த்ததுதான். எனினும், இவ்வளவு தூரம் இனஒடுக்குமுறையை மேற்கொள்வது கண்டிக்கத்தக்க விடயம்.

உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியை இடிப்பதன் மூலம், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இனஒடுக்குமுறையின் பரிமாணத்தை உலகிற்கு அவர்களாக வெளிப்படுத்தியுள்ளனர்.

இவர்களிடமிருந்து தமிழ் மக்கள் நீதியை எதிர்பார்க்க முடியாதென்பதையும் தெளிவாக புலப்படுத்தியுள்ளனர். இந்த மோசமான நடவடிக்கையை நாம் கண்டிக்கிறோம்.

உயிரிழந்த உறவுகளை அஞ்சலிக்கும் தமிழ் மக்களின் உரிமையை எவரும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.