வவுனியா – பூவரசங்குளம், செங்கல்படை பகுதியில் உள்ள தோட்ட காணியில், முட்டி ஒன்றுக்குள் இருந்து, 30 கைக்குண்டுகளை, பூவரசங்குளம் பொலிஸார், நேற்று  (17) மாலை; மீட்டுள்ளனர்.

தோட்ட காணியை, அதன் உரிமையாளர் துப்புரவு செய்த போது,; முட்டி ஒன்றுக்ள் கைக்குண்டுகள் இருப்பதை அவதானித்து, அது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், அந்த முட்டியிலிருந்து 30 கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.

இப்பகுதியில், மேலும் வெடிபொருள்கள் இருக்கலாம் என்ற சந்தேகித்துள்ள பொலிஸார், நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த பகுதியை சோதனை மேற்கொள்ளவுள்ளதாக் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முகாம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.