நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. நேற்றைய தினம் (18) 34 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

இதற்கமைய, நாட்டில் ஒரே நாளில் அதிகூடிய கொரோனா மரணங்கள் பதிவாகிய நாளாக நேற்றைய தினம் (18) பதிவானது.

ருவன்வெல்ல, மட்டக்குளி, நாவலப்பிட்டி, புத்தளம், கஹட்டகஸ்திகிலிய, அலவத்துகொட, பஸ்யால, முலட்டியன, பமுனுவத்தை, மடபாத்த, அங்குலுகஹ, கொடகந்தை, தல்கஸ்வல, ரத்கம, இரத்தினபுரி, உடுமுல்ல, ராகம, அத்துருகிரிய, கிரிந்திவெல, தெமட்டகொடை, வெல்லம்பிட்டி, கொழும்பு – 02, நுகேகொடை, கந்தப்பொல, பன்னல, பண்டாரகம (இருவர்), இங்கிரிய, மஹகம, மடபாத்த, கெப்பிட்டிபொல, கெட்டபோல, வட்டினாபஹ மற்றும் மயிலபிட்டி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அந்தவகையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,015 ஆக அதிகரித்துள்ளது.