2020/21 கல்வி ஆண்டிற்கான பல்கலைகழக விண்ணப்பங்கள் எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரையில் கோரப்படவுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு உயர்தர பரீட்சையில் தோற்றி பெறுபேறுகள் வௌியாகியுள்ள மாணவர்களின் விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

மாணவர்களினால் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தின் புகைப்படம் ஒன்றை எடுத்து அதில் கையொப்பமிட்டு உறுதிப்படுத்தி, apply2020@UGC.ac.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் மாணவர் கையோட்டை அன்றைய தினமே ஆணைக்குழுவின் இணைதளத்தின் ஊடாக தரவிரக்கம் செய்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.