நாடு பூராகவும் இன்று இரவு 11 மணியிலிருந்து 25ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரை பயணக்கட்டுப்பாடு அமுலாகவுள்ளது. இருப்பினும் , 25ஆம் திகதி அதிகாலை நான்கு மணியிலிருந்து 19 மணிநேரத்திற்கு பயண தடை விலகிக் கொள்ளப்படும்.
அன்றிரவு 11 மணியிலிருந்து மீண்டும் அமுலுக்கும் வரும் பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
இதற்கமைவாக அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் வீடுகளிலிருந்து செல்ல அனுமதி வழங்கப்படும். இன்றிலிருந்து 24 ஆம் திகதி வரை சகல பொருளாதார மத்திய நிலையங்களும் மூடப்பட்டிருக்கும்.
25 ஆம் திகதி அதிகாலை நான்கு மணியிலிருந்து சகல பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படும். பின்னர் மீண்டும் 26 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்.
கொவிட் நெருக்கடிக்கு மத்தியல் மக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி வீடுகளில் தங்கியிருக்குமாறு இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்வதற்கு சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.