எதிர்வரும் செவ்வாய்கிழமை போக்குவரத்து கட்டுப்பாட்டை நீக்காமல் 14 நாட்களுக்கு தொடர்ந்து போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என விஷேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விஷேட வைத்தியர் லக்குமார பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் சில நாட்களுக்கு மாத்திரம் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்க எடுத்த தீர்மானத்தில் எவ்வித விஞ்ஞான ரீதியான அடிப்படையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொற்று நோயியல் பிரிவினதும் அரசாங்கத்தினதும் நிபுணர்களின் கருத்துக்களை பின்பற்றாவிடின் நிலைமை மோசமடையக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமைக்கு ஒரே தீர்வு 14 நாட்களுக்கு கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது அல்லது நாட்டை முடக்குவது என இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் விஷேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.