தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, நேற்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, ராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்து நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம் ஏ.சுமந்திரன், எஸ்.சிறிதரன், வினோ நோகராதலிங்கம்,
கோ.கருணாகரன்(ஐனா), சாணக்கியன், சார்ள்ஸ், கலையரசன் ஆகியோரும்,

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், வே.ராதாகிருஷ்ணன் ஆகியோரும்,

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தெளிவுபடுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் விடுதலை தொடர்பாக நீண்ட காலமாக தாம் பேசி வருவதாகவும் ஆகவே, இது தொடர்பாக உடன் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்கள்.

இது தொடர்பாக தாம் அரசாங்கத்துடன் பேசிவிட்டு அறியத்தருவதாக அமைச்சர்கள் இதன் போது தெரிவித்துள்ளனர்.