நாடு முழுவதும் நேற்று (21) இரவு 1 மணிமுதல் பயணக்கட்டுப்பாடு அமுலுக்கு வந்துள்ளதுடன், எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடரும்.

எனினும், 25ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் அன்றிரவு 11மணி வரையில் நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டு அன்றிரவு 11மணி முதல் 28ம் திகதி அதிகாலை 4 மணிவரையில் மீண்டும் நடைமுறைக்கு வரும்.

குறித்த காலப்பகுதியில் கடற்றொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என கடற்றொழில் துறை இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், மீன் மொத்த விற்பனை நிலையங்களை திறப்பதற்கு வர்த்தகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் சகல பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.