கொழும்பில், பல பிரதேசங்களிலிருந்தும் கொரோனா தொற்றாளர்களாக 800 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

கொ​விட்-19 தொற்றொழிப்பின் தேசிய மத்திய நிலையத்தின் தகவல்களின் பிரகாரம் நாரஹேன்பிட்டியவில் கொரோனா தொற்றாளர்கள் 73 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்றுக்காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்திலேயே இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அந்த அறிக்கையின் பிரகாரம் ​வெள்ளவத்தையில் 45 பேரும், அவிசாவளையில் 51 பேரும், தெஹிவளையில் 43 பேரும், மஹரகமவில் 56 பேரும், கல்கிஸையிலி 32 பேரும், பிலியந்தலையில் 74 பேரும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.