ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ மற்றும் அவருடைய மனைவியான ஜலனி பிரேமதாஸ ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

அவ்விருவரும் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ள சஜித் பிரேமதாஸ,

“தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. கொவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டனர். அதனால், இவ்விருவரும் சென்று, பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்துகொண்டோம். அதன் அறிக்கைகள் கிடைத்துள்ளன. அதன்பிரகாரம் இருவரும் கொரோனா தொற்றியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இருவரும் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.