நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணத்தடை மே.28 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும். பயணத்தடை தளர்த்தப்படுமே அன்றி நீக்கப்படாது என அறிவித்துள்ள அரசாங்கத் தகவல் திணைக்களம், அத்தியாவசிய பணிகளுக்கு மாத்திரமே பயணத்தடை தளர்த்தப்படுகின்றது என அறிவித்துள்ளது.
இதேவேளை, 27ஆம் திகதி நிலைமையை கவனத்தில் கொண்டே, 29 மற்றும் 30ஆம் திகதிகளில் பயணத்தடை விதிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படுமென அத்திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.