புத்தளம் நகர சபையின் நகரபிதா கே.ஏ.பாயிஸ் அவர்கள் நேற்று விபத்தொன்றில் மரணமானதையிட்டு புளொட் அமைப்பினராகி நாம் மிகுந்த துயரடைகின்றோம்.

80களில் மருத்துவர் இலியாஸ் அவர்கள் எமது செயலதிபருடன் நெருக்கமான தொடர்பில் இருந்து கழகத்திற்கு ஆதரவாக செயற்பட்டபோது கே.ஏ.பாயிஸ் அவர்களும் அவருடன் தங்கியிருந்து கழகத்திற்கு பல்வேறு உதவிகள் புரிந்ததை துயர்மிகு இத்தருணத்தில் நினைவுகூர்கின்றோம்.

பாராளுமன்ற உறுப்பினராக , பிரதி அமைச்சராக பிந்திய காலங்களில் பதவி வகித்த அவர் மரணிக்கும் வரையில் புத்தளம் நகரசபையின் நகரபிதாவாக பணியாற்றினார்.

அன்னாரின் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாருக்கு எமது இதய அஞ்சலிகள்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
24.05.2021.