உள்வரும் பயணிகளுக்காக தற்போது மூடப்பட்டுள்ள இலங்கை சர்வதேச விமான நிலையங்கள் எதிர்வரும் ஜுன் மாதம் 1 முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபாலி தர்மதாச அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த 14 தினங்களுக்குள் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த பயணிகளை அனுமதிப்பது தொடர்பான கட்டுப்பாடு தொடர்ந்தும் அமலில் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.