யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பிறந்து 24 நாள்களேயான சிசுவுக்கு, கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்று நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிசு, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

இங்கு மேற்கொள்ளப்பட்ட  என்ரிஜன் பரிசோதனையின் மூலம், சிசுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளத.

சிசு, தற்பொழுது வைத்திய நிபுணர்களின் விசேட கண்காணிப்பின் கீழ்  பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, தாய்க்கும் தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.