நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடுகளை, அவ்வாறே, ஜுன் 7ஆம் திகதி வரையிலும் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 31ஆம் திகதி மற்றும் அடுத்த மாதம் 4ஆம் திகதிகளில் பயணக்கட்டுபாடு தளர்த்தப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குறித்த நாள்களில் பயணக்கட்டுபாடு தளர்த்தப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.