கொவிட்-19 தொற்றுக்குள்ளான யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆங்கில விரிவுரையாளரான ஶ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி உயிரிழந்துள்ளார்.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் விரிவுரையாளரின் குடும்ப உறுப்பினருக்கு கொவிட்-19 தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விரிவுரையாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் விரிவுரையாளருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.

இந்நிலையில், யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த விரிவுரையாளர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.