மேலும் 42 கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் (29) உறுதி  செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து,  நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1405 ஆக அதிகரித்துள்ளது.

கலிகமுவ, அலவ்வ, கண்டி, சிலாபம், ஹட்டன் (மூவர்), பலாங்கொடை, மஸ்கெலியா, பொகவந்தலாவை (இருவர்), தங்கொட்டுவ, பண்டாரகம, அங்குருவாத்தோட்டை, பனாகமுவ, இப்பாகமுவ, பன்சியகம, காலி, பத்தரமுல்லை, கொலன்னாவ, லக்கல, குண்டசாலை, கொமகொட, மீதொட்டமுல்லை, நாகொட, அம்பலாங்கொடை, உக்கல்பொட, தர்க்காநகர், நாவலப்பிட்டி (மூவர்), மஹியங்கனை, ஊவா பரணகம, பதுளை, குருநாகல், ஏக்கல, யாழ்ப்பாணம்,  ஹொரணை (இருவர்), கோவின்ன, நிட்டம்புவ மற்றும் கஹட்டஓவிட்ட ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 42 பேரே கொரோனா தொற்றுக்குள்ளாகி அறிவித்துள்ளனர்.