இலங்கை துறைமுகத்தில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ்-பேர்ள் கப்பல் தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து, புதிய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் தலைமையில், விசேட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் கடற்படைத் தளபதி மற்றும் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, தற்போதைய நிலைமையில், குறித்த கப்பல் மூழ்குவதற்கோ எரிபொருள் கசிவுக்கோ வாய்ப்பில்லை என, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உலுகேதென்ன தெரிவித்துள்ளார்.