வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வயோதிபர் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றால் இன்று உயிழந்துள்ளார்.

குறித்த நபர் சுகவீனம் காரணமாக, வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த போதும், சிகிச்சை பலனின்றி அவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

நெடுங்கேணி – கற்குளம் பகுதியை சேர்ந்த 52 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.