Header image alt text

நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வு இம்மாதம் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், பெரும்பாலான தமிழ் தேசியக் கட்சிகளின் நிலைப்பாட்டினை பிரதிபலிக்கும் கடிதமொன்று மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார் Read more

மலர்வு – 1963.03.03 உதிர்வு – 2021.05.09

காரைதீவைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்டவரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினரும், கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரும், கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான (தோழர் பக்தன்) மகாதேவன் சிவநேசன் அவர்கள் கடும் சுகயீனம் காரணமாக இன்று(09/05/2021) காலமானதையிட்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் ஆழ்ந்த துயரடைகின்றோம்.

80களின் ஆரம்பத்தில் அம்பாறை மாவட்டத்தில் காந்தீயம் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளராக மக்கள் மத்தியில் தொண்டாற்றிய தோழர் பக்தன், இயல்பிலேயே இனப்பற்றும் சமூகப்பற்றும் மிகுந்தவர். Read more

மரண அறிவித்தல்!

Posted by plotenewseditor on 9 May 2021
Posted in செய்திகள் 

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும், கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரும், கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான (தோழர் பக்தன்) மகாதேவன் சிவநேசன் அவர்கள் சுகயீனம் காரணமாக இன்றுபகல் காலமானார் என்பதை மிகுந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.

09.05.1985இல் வல்வெட்டித்துறையில் மரணித்த தோழர் சுகுணன் (சுவேந்திரன் – வல்வெட்டி) அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..

கழகத்தின் ஆரம்ப அணியில் பயிற்சி பெற்ற இவர் , அசாத்திய துணிச்சல் மிக்க போராளியாவார். 1985.05.09ல் வல்வெட்டித்துறையில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது, நேரடி மோதலில் மரணமானார்.

 

படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகப்புத்தக பக்கத்தைத் தவிர்த்து, புளொட் அமைப்பின் சின்னத்துடன், கட்சியின் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) சின்னத்துடன், கட்சியின் தேர்தல் சின்னத்துடன் அல்லது கட்சி தலைவர் உள்ளிட்டவர்களுடைய புகைப்படத்துடன், சின்னத்துக்குள் புகைப்படங்களுடன், Plote Dplf, Plotenews Plote(Plotenews), PLOTE, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி Democratic People’s Liberation Front, Plote Dplf(தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், People’s Liberation Organisation of Tamil Eelam – PLOTE, Dplf London, DPLF Canada, DPLF Great Britain, Plote Jaffna
உள்ளிட்ட பெயர்களில் இயங்கும் முகப்புத்தக பக்கங்கள் எவையும் புளொட் அமைப்பின் உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கங்கள் அல்ல என்பதையும் மேற்கூறப்பட்ட முகப்புத்தக பக்கங்களில் வெளிவரும் பதிவுகளுக்கும் புளொட் அமைப்புக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதையும் உத்தியோகபூர்வமாக அறியத் தருகிறோம்.

Read more

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், பணியாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை அடுத்து, பாராளுமன்ற கட்டடத்தொகுதியில், சபாநாயகரின் காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அத்துடன் அந்த காரியாலயத்தில் பணியாற்றிய பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சபாநாயகர் அந்தக் காரியாலயத்துக்கு வருகைதருவதை தவிர்த்துள்ளார்.

நாட்டில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றால் 19 மரணங்கள் பதிவாகியுள்ளதை சுகதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 764 ஆக உயர்வடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் பதிவான மரணங்களே நாட்டில் நாளொன்றில் பதிவான அதிகபட்ச கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட மரண எண்ணிக்கையாக கருதப்படுகிறது. இதற்கமைய, சுனந்தபுர, இளவாலை, கோங்கஹவெல, இரத்மலானை, தெய்யத்தகண்டி, பதுளை- மயிலகஸ்தென்ன, வாத்துவ, கொழும்பு-3, ரத்தொழுகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தனர். Read more

வவுனியா பம்பைமடு பகுதியில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் மூழ்கி காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் வவுனியா பம்பைமடுப் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிப்பதற்காக 5 பேர் சென்றுள்ளனர். இதன்போது நபர் ஒருவர் நீர்தேக்கத்தில் இறங்கிய நிலையில், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த ஏனைய நபர்கள் அவரை நீரினுள் இறங்கி தேடியுள்ளனர். எனினும் அவரை மீட்க முடியவில்லை. இந்நிலையில் இன்று காலை கடற்படையின் சுழி ஓடிகள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் நபரின் சடலம் மீட்கப்பட்டது. சம்பவத்தில் கற்பகபுரம் பகுதியை சேர்ந்த ரவி வயது 50 என்ற குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1914 பேர் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 1 இலட்சத்து 21 ஆயிரத்து 338ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 1 இலட்சத்து ஆயிரத்து 763 பேர் குணமடைந்துள்ளதுடன், 18 ஆயிரத்து 811 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் பரவி வரும் B1.617 என்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபரொருவர் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளார். அவர், வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவரின் பரிசோதனை மாதிரியிலேயே இவ்வாறு புதிய வகை வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது. ‘தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த ஒருவருக்கே முதன் முறையாக இந்த வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது’ ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.