கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட பயணத் தடையால் வறுமைக் கோட்டிற்கு கீழ்ப்பட்ட மக்கள் மிகவும் துன்புற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் மாமூலை கிராம அலுவலர் திரு. அருணோதயம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க சுவிஸ் தோழர் சிவா அவர்கள் தனது பிறந்த நாளை முன்னிட்டு கழகத்தின் சுவிஸ் கிளையின் ஊடாக வழங்கிய நிதியில் 35 குடும்பங்களுக்கு ரூபாய் 1400/= பெறுமதியான உலருணவுப் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

அந்த மக்களும் கிராம அலுவலரும் தோழர் சிவா அவர்களின் பிறந்தநாளுக்கு மிக மகிழ்ச்சியுடன் வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

மாமூலை கயட்டை சனசமூக நிலையத்தில் இன்று மாலை 4.00மணியளவில் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் பொருளாளர் க.சிவநேசன்(பவன்), கட்சியின் தேசிய அமைப்பாளர் தவராஜா மாஸ்டர், கட்சியின் மாவட்ட செயலாளர் யூட், கிராம அலுவலர் மற்றும் உலக தமிழ் மாணவர் அமைப்பின் பிரதிநிதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.