நாட்டில் மேலும் 12 மாவட்டங்களில் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் சினோஃபார்ம் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நுவரெலியா, மாத்தளை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, புத்தளம், கேகாலை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், மொனராகலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

கர்ப்பிணி பெண்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் அரச ஊழியர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுமென அவர் கூறியுள்ளார்.