மட்டக்களப்பு, இருதயபுரம் கிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு, புலனாய்வுப் பிரிவினர் எனக்கூறி வந்தவர்களால் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட இளைஞன், இன்று (03) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்று இரவு 10.30 மணியளவில் இருதயபுரம் கிழக்கு ஏழாம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கைதுசெய்யப்பட்ட 22 வயதுடைய சந்திரன் விதுசன் என்னும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.