பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நாடளாவிய ரீதியில் தாதியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலும் தாதியர்கள் இன்று பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.

இதன் போது அவர்கள் பின்வரும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

´அண்டிஜன் கடமை எங்களுக்கு மட்டுமா? உரிமைகளையும், சலுகைகளையும், அடிப்படை வசதிகளையும் வழங்க தாமதிக்காதே, நாம் நோயாளிகளுக்கான சேவையினை தடையின்றி ஆற்ற போக்குவரத்து வசதி செய்து கொடு, சுகாதார ஊழியர்களுக்குரிய முகக்கவசம், பாதுகாப்பான உடை என்பவற்றை தொடர்ச்சியாக வழங்கு, எமது கோரிக்கைகளுக்கு மதிப்பளி, தாதியர்களை அடிமையாக்காதே, எம்மையும் பேசவிடு, எமது கருத்துக்களுக்கு செவி மடு போன்ற வாசகங்கள் எழுப்பட்ட சுலோகங்களையும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்ட தாதியர்கள் ஏந்தியிருந்தனர்.