அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 2021 மே 18ஆம்  திகதி சமர்ப்பிக்கப்பட்ட   தீர்மானம்
குறித்து  வெளிநாட்டு  அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இந்தத் தீர்மானம்   வெளிநாட்டு  விவகாரங்கள்  தொடர்பான  சபைக் குழுவுக்கு அன்றைய தினமே  பரிந்துரைக்கப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பில் ஜோன்சன்,  டேனி கே. டேவிஸ்,  பிரெட் ஷெர்மன் மற்றும்  கேத்தி மெனிங் ஆகிய நான்கு பிரதிநிதிகளுடன் இணைந்து பிரதிநிதி திருமதி. டெபோரா  கே. ரோஸ்  அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இந்த தீர்மானத்தை சமர்ப்பித்தார்.

தீர்மானத்தின் நோக்கத்தில் கடுமையான சந்தேகங்களை எழுப்பும் வகையில், ஆதாரமற்ற,
நிறுவப்படாத மற்றும் அப்பட்டமான பொய்களைக் கொண்ட குற்றச்சாட்டுக்களைக் கொண்டுள்ள இந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கங்களுக்கு இலங்கை அரசாங்கம் கடுமையாக எதிர்ப்புக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது என வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் தவறான, பக்கச்சார்பான மற்றும் ஒருதலைப்பட்சமான
தன்மையைக் கருத்தில் கொண்டு, இது வெறுமனே மனித உரிமை சார்ந்த தீர்மானம் அல்
ல என்றும் இலங்கை வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி, அமெரிக்கா உட்பட 32 நாடுகளில் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்
யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்
துச் செல்வதற்காக அமெரிக்கக் காங்கிரஸில் உள்ள ஒத்த கருத்துடைய தமிழீழ விடுதலை
ப் புலிகளின் அனுதாபிகளாக அறியப்பட்டவர்களால் தாக்கம் செலுத்தப்பட்ட ஒரு நடவடி
க்கையாகத் தென்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் தனது பிரதிபலிப்பை வொஷிங்டன், டி.சி.யில் உள்ள இலங்கைத் தூ
தரகத்தினூடாக வெளிநாட்டு விவகாரங்கள் சபை, ஆசியா தொடர்பான துணைக்குழு ச
பை மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு சம
ர்ப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது என்றும் வெளிநாட்டு அமைச்சு விடுத்துள்ள ஊடக
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது