மாவனெல்ல – தெவனகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன நால்வரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் (56), தந்தை (57), மகள் (23), மகன் (29) ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்புப் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.