Header image alt text

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலையால், இதுவரையில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மூவர் காணாமல்போயுள்ளதோடு, இரண்டு இலட்சத்து 70 ஆயிரத்து 12 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸின் பெண் உறுப்பினரான டெபொரா ரோஸினால் (ஜனநாயகக் கட்சி / வட கரோலினா) 2021 மே 18 ஆம் திகதி கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான எச். ஆர்.இ.எஸ். 413 என்ற தீர்மானத்தை தொடர வேண்டாம் என அமெரிக்க சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவிடம் வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்கவின் ஊடாக இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. Read more

இலங்கையில் மேலும் 1,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். Read more

கொழும்பு நகருக்குள் நுழையும் வாகனங்களுக்காக, ஸ்டிக்கர் முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Read more

கடலில்  மூழ்கிக்கொண்டிருக்கும் X-Press Pearl கப்பலின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதலின் போது கண்டுபிடிக்கப்பட்ட கருப்புப் பெட்டி, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. Read more

சீனாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகுதி சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. அதன்படி, இன்று (06) காலை ஒரு மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்ததடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். Read more

நேற்றையதினம்(05) 40 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன. இதன்பிரகாரம், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,696 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.