இறுதிப் போரில், முள்ளிவாய்க்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட செஞ்சுடர் மாஸ்டரின் தாயாரும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளர் அ. ஈழம் சேகுவேராவின் தாயாருமான தேவகி அம்மா, புற்றுநோயால, இன்று (07) உயிரிழந்துள்ளார்.

வவுனியாவை வசிப்பிடமாகக் கொண்ட தேவகி அம்மா, காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை, கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தேடியலைந்திருந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.